Published : 21 May 2018 06:27 PM
Last Updated : 21 May 2018 06:27 PM
ஐபிஎல் போட்டியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாபை தன் திடீர் முடிவின்படி ஹர்பஜன், சாஹரை இறக்கி பஞ்சாப் திட்டத்தில் மண் அள்ளிப்போட்ட தோனி தன் முடிவு குறித்து சில கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
அதாவது விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது பின் கள வீரர்களான ஹர்பஜன், சாஹர் ஆகியோரை திடீரென இறக்கியது எதிரணி திட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றார்.
கிங்ஸ் லெவன் வெளியேற, சிஎஸ்கே தன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன் முதல் 2 இடங்களில் முடிவடைவதை உறுதி செய்தது.
தோனி கூறும்போது, “பந்துகள் கொஞ்சம் ஸ்விங் ஆனது, ஸ்விங் ஆகும் போது நிறைய விக்கெட்டுகளைக் கைப்பற்றவே பார்ப்போம், அவர்களும் அதன்படியே ஆடினர், ஆனால் ஹர்பஜன், சாஹரை இறக்கியது அவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் போது முறையான பேட்ஸ்மென்களை இறக்கினால் பவுலர்கள் சீராக வீசுவார்கள். கீழ்வரிசை வீரர்கள் என்றால் அவர்கள் பவுன்சர்கள், ஆஃப் கட்டர்களை வீசுவார்கள்.
(சிக்ஸ் பினிஷ் குறித்து) அனைத்து பீல்டர்களும் முன்னால் வரவழைக்கப்பட்டனர், எனவே நான் பெரிய ஷாட்டுக்குச் சென்றேன்.
(அணி நிர்வாகம் பற்றி) வீரர்களிடம் நெருங்கிப் பழகும் சிலர் எங்களிடையே உள்ளனர், இது கேப்டனுக்கு விஷயங்களை எளிதாக்குகிறது. எங்களிடம் நல்ல அணியும் உள்ளது. ஐபிஎல் முதல் தொடரிலிருந்தே நாங்கள் வீரர்களை சேர்த்துக் கொண்டே வந்தோம், அஸ்வின், மோஹித், போலிஞ்சர்... என்று. ஆனால் 2 ஆண்டுகளில் இப்போதிருக்கும் வீரர்களில் பலர் ஆடமாட்டார்கள் என்பதால் பெரிய சவால் காத்திருக்கிறது
நாங்கள் செயல்திட்டத்தை சரிப்படுத்திவிட்டால் முடிவு நமக்குச் சாதகமாக இருக்கும். எனக்கு முந்தைய இறுதிப்போட்டிகள் நினைவில் உள்ளன, அதில் எங்கு தவறு நிகழ்ந்தது என்பதும் என் நினைவில் உள்ளது, நினைவில் வைத்துக் கொள்வது முக்கியம். அந்தக் குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல் படுவது அவசியம், ஏனெனில் அனைவரும் வெற்றி பெற விரும்புவார்கள். இவை அனைத்தும் முக்கியமானவை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT