Published : 18 May 2018 04:37 PM
Last Updated : 18 May 2018 04:37 PM
சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணியிடத்தில் ஒரு குணம் வெளிப்படுகிறது, அது எதிரணியினர் மீது எப்போதும் புகார் கூறி புலம்புவது என்று கூறிய ஷேன் வார்ன் நியூஸிலாந்து போல் ஆட வேண்டாம் என்றும் விமர்சித்துள்ளார்.
பால் டேம்பரிங் சமயத்தின் போது ஷேன் வார்ன் தென் ஆப்பிரிக்க தொடரில் வர்ணனைப் பணியில் இருந்தார்.
பால் டேம்பரிங்கினால் பேங்கிராப்ட், ஸ்மித், வார்னர் ஓராண்டு தடைசெய்யப்பட்ட பிறகே வீரர்கள் நடத்தை, ஸ்லெடிங், கல்ச்சர் என்று பல்வேறு கோணங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆய்வில் இறங்கியுள்ளது.
ஆனால் இவையெல்லம் எதிரணி மீது புகார்கள் கூறும் பழக்கத்தினால் ஏற்பட்டவையே என்கிறார் ஷேன் வார்ன்.
“அணிக் கலாச்சாரப் பிரச்சினைகள் இருக்கிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணித்தரப்பிலிருந்து நிறைய எதிரணி பற்றிய புகார்கள், புலம்பல்கள் சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
இது உண்மையில் ஆஸ்திரேலிய அணித் தன்மைக்கு எதிரானது, எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியும் எதிரணி பற்றி புலம்பி நான் பார்த்ததில்லை.
ஆனால் இந்த சம்பவங்களினால் நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி கிரிக்கெட் ஆட வேண்டும் என்று எல்லோரும் கருத்து தெரிவிக்கின்றனர். நாங்கள்நியூஸிலாந்து போல் ஆட விரும்பவில்லை. அதாவது கமான் என்பது எங்கள் அணுகுமுறை, நியூஸியினுடையது நோ, தேங்க் யூ.
ஆனால் இப்போது சர்ச்சைகளுக்குப் பிறகு நியூஸி. ஆஸி வழிமுறைகளுக்கு இடைப்பட்ட ஒரு வழிமுறையைக் கடைபிடிக்க வேண்டும். கடினமாக, சமரசரமற்ற முறையில் ஆடுங்கள் ஆனால் எதிரணி வீரருடன் கைகொடுங்கள் ஆட்ட உணர்வை விட்டுவிடாமல் ஆடுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT