Published : 04 Aug 2024 06:15 AM
Last Updated : 04 Aug 2024 06:15 AM
சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியனான கோவை அணி தகுதி சுற்று 1-ல் திருப்பூர் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸையும், தகுதி சுற்று 2-ல் திருப்பூர் அணியையும் வீழ்த்தி இறுதி சுற்றில் கால்பதித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணி ரூ.30 லட்சம் பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment