Published : 01 Aug 2024 12:10 AM
Last Updated : 01 Aug 2024 12:10 AM
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார். அவருக்கு வயது 71.
கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அன்ஷுமான் கெய்க்வாட், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார். அவருடைய சிகிச்சை செலவுகளுக்காக பிசிசிஐ ரூ.1 கோடி நிதியுதவி செய்திருந்தது.
கெய்க்வாட் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 22 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 205 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அன்ஷுமான் கெய்க்வாட், இரண்டு முறை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சியின் கீழ், இந்திய அணி 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கெய்க்வாட் மறைவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
My deepest condolences to the family and friends of Mr Aunshuman Gaekwad. Heartbreaking for the entire cricket fraternity. May his soul rest in peace
— Jay Shah (@JayShah) July 31, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT