Published : 03 May 2018 05:26 PM
Last Updated : 03 May 2018 05:26 PM
உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டி உறுப்பினர் வினோத் ராய், விராட் ஆப்கான் தொடர், அதில் விராட் கோலி பங்கேற்பு, இங்கிலாந்து தொடர் ஆகியவை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆடவில்லையெனில் அது அந்த அணிக்கு செய்யும் அவமானம் என்று பிசிசிஐ-யில் சில அதிகாரிகள் கருத்து கூறிவந்துள்ல நிலையில் இங்கிலாந்து தொடருக்காக கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆடுவதா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பு வகிப்பதா என்பதை விராட் கோலியின் முடிவுக்கு விட்டுவிடுவோம் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கிரிக்கெட் நிர்வாகக் குழு முக்கிய முடிவை எடுத்துள்ளது, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆடினால் தவறில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர்கள் ஆடுவதை தடுக்கவில்லை. இலங்கையில் ஆடிய அணி ஆப்கானுக்கு எதிராக விளையாடும்.
ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக ஆடுகிறதே தவிர, விராட் கோலிக்கு எதிராக அல்ல. எந்த ஒரு வீரரும் (புஜாரா உட்பட) ஆப்கானிஸ்தானுடன் ஆடுவதற்காக இங்கிலாந்து கவுண்ட்டியிலிருந்து திருப்பி அழைக்கப்படப் போவதில்லை.
இங்கிலாந்துக்குத்தான் முன்னுரிமை, அங்கு சென்று நன்றாக ஆடுவதுதான் முக்கியம். என்ன ஆனாலும் சரி.
தென் ஆப்பிரிக்கா தொடரில் நடந்ததை மீண்டும் நடத்த விரும்பவில்லை. பிசிசிஐயின் பணிக்குழு நாங்கள்தான் எனவே பிசிசிஐ என்ன நினைக்கிறது, கூறுகிறது அல்லது சிந்திக்கிறது என்பது பற்றி கவலையில்லை.
இவ்வாறு கூறினார் வினோத் ராய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT