Published : 29 Jul 2024 08:22 AM
Last Updated : 29 Jul 2024 08:22 AM

ஒலிம்பிக் பாட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

பி.வி.சிந்து

பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் அப்துல் ரசாக் நபாஹா ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் சிந்து, 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமத் அப்துல் ரசாக்கை வீழ்த்தினார்.

இதையடுத்து வரும் 31-ம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்தோனியா நாட்டு வீராங்கனை கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டு விளையாடவுள்ளார். முன்னதாக பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜோடி தோல்வி: மகளிர் பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வி கண்டது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, கொரியாவின் கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கிம் சோ யோங் - காங் ஹீ யோங் ஜோடியானது, 21-18, 21-10 என்ற செட் கணக்கில் தனிஷா - அஸ்வினி பொன்னப்பா ஜோடியை தோற்கடித்தது.

அடுத்த லீக் ஆட்டத்தில் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி ஜோடியானது, ஜப்பானின் நமி மட்சுயாமா - ஷிஹாரு ஷிடா ஜோடியுடன் மோத உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x