Published : 29 Jul 2024 07:51 AM Last Updated : 29 Jul 2024 07:51 AM
பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர்களின் இன்றைய போட்டி
பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறு வருகிறது. இந்தியா பதக்க கணக்கை தொடங்கி உள்ளது. இன்று (திங்கள்கிழமை) இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் பங்கேற்று விளையாட உள்ளனர். அது குறித்து பார்ப்போம்.
பாட்மிண்டன்: ஆடவர் இரட்டையர் பிரிவு லீக் சுற்றில் சாட்விக் , ஷிராக் ஜோடி, மகளிர் இரட்டையர் பிரிவில் தனிஷா, அஸ்வினி ஜோடி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென் பங்கேற்பு. போட்டிகள் காலை 8.30 மணிக்கு தொடங்குகின்றன.
வில்வித்தை: ஆடவர் அணிப் பிரிவில் தருண்தீப், தீரஜ், பிரவீண் பங்கேற்பு, மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
துப்பாக்கிச் சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவு தகுதிச் சுற்றில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி, ரிதம் சங்க்வான், அர்ஜுன் சிங் சீமா ஜோடி, ஆடவர் டிராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான், 10 மீட்டர் மகளிர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா ஜிண்டால், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜுன் பபுதா பங்கேற்பு, பகல் 12.45 மணிக்கு போட்டிகள் தொடங்கவுள்ளன.
ஹாக்கி: இந்தியா - அர்ஜெண்டினா அணிகள் லீக் சுற்றில் பங்கேற்பு, போட்டி மாலை 4.15 மணிக்கு தொடங்கும்.
டேபிள் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜா அகுலா பங்கேற்பு, காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
WRITE A COMMENT