Published : 28 Jul 2024 08:29 AM
Last Updated : 28 Jul 2024 08:29 AM

பாரிஸ் ஒலிம்பிக்: டைவிங்கில் சீனாவின் வேட்டை தொடக்கம்

டைவிங்கில் மகளிருக்கான ஒத்திசைக்கப்பட்ட 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு பிரிவில் சீனாவின் சாங் யானி, சென் யிவென் ஜோடி 337.68 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது. அமெரிக்கா 314.64 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், கிரேட் பிரிட்டன் 302.28 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின. டைவிங்கில் மொத்தம் 8 பிரிவுகளில் பதக்க போட்டி நடைபெறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் டைவிங்கில் சீனா 7 தங்கம் வென்றிருந்தது. இம்முறை 8 தங்கத்தையும் கைப்பற்றுவதில் முனைப்புடன் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x