Published : 28 Jul 2024 09:03 AM
Last Updated : 28 Jul 2024 09:03 AM
பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று லீக் சுற்று நடைபெற்றது. இதில் ‘எல்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 14- நிலை வீரரான இந்தியாவின் லக்ஷயா சென், 41-ம் நிலை வீரரான கவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 21-8, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி பிரான்ஸின் லூகாஸ் கோர்வி, ரோனன் லாபர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக் - ஷிராக் ஜோடி 21-17, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் 11-7, 11-9, 11-5, 11-5 என்ற செட் கணக்கில் ஜோர்டானின் சைத் அபோ யாமனை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment