Published : 24 May 2018 08:08 AM
Last Updated : 24 May 2018 08:08 AM
1962
-ம் ஆண்டு 7-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்அமெரிக்க நாடான சிலியில் நடைபெற்றது. 1960-ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந் தனர். இதனால் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெறுவதில் அந்நாடு பெரும் சிக்கலை சந்தித்தது.
இந்தத் தொடரில் 1958-ம் ஆண்டு 2-வது இடம் பெற்றிருந்த ஸ்வீடன் இந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை.
நடப்பு சாம்பியனான பிரே சில் அணி தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. புகழின் உச்சியில் இருந்த பீலே, மெக்ஸிகோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஒரு கோல் அடிக்க பிரேசில் 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. ஆனால் செக்கோஸ்லோவேகியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் பீலே காயமடைந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் தொடர் முழுவதுமே களமிறங்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பை கால்பந்தில் வீரர்கள் மிகமோசமாக விளையாடிய ஆட்டமாக இத் தாலி - சிலி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்தது. எதிரணியினரை தள்ளி விடுவது, உதைப்பது போன்ற மோசமான செயல்களில் இரு தரப்பினரும் ஈடு பட்டனர். இத்தாலி வீரர்களான ஜியோர்ஜியோ ஃபெரினி, மரியோ டேவிட் ஆகியோர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப் பட்டனர். போட்டி முடிந்த பிறகு இரு அணியினரையும் போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உருவானது. இந்த ஆட்டத்தில் சிலி 2-0 என்ற கணக்கில் வென்றது.
பிரேசில் அணியில் பீலே இல்லாத குறையை கரிஞ்சா போக்கினார். இவரது இயற் பெயர் மானுவேல் பிரான் சிஸ்கோ ஆகும். எனினும் அவர் செல்லமாக கரிஞ்சா என்றே அழைக்கப்பட்டார். கரிஞ்சா என்றால் போர்த்துக்கீசிய மொழியில் ‘லிட்டில் பேர்டு’ (சிறிய பறவை) என்று பொருள். உலகக் கோப்பையில் சிறகடித்து பந்த கரிஞ்சா, கால் இறுதி மற்றும் அரை இறுதியில் தலா இரு கோல்கள் அடித்து அசத்தினார். இறுதிப் போட்டியில் பிரேசில் அணி செக்கோஸ்லோ வேகியாயுடன் மோதியது.
அரை இறுதி ஆட்டத்தின் போது ஒரு கட்டத்தில் எதிரணி வீரருடன் முரட்டுத் தனமாக கரிஞ்சா நடந்துகொண்டார். இதனால் இறுதிப் போட்டியில் அவர் தடையை எதிர்கொள்ள இருந்தார். ஆனால் பிரேசில் நாட்டு பிரதமரின் தலையீடு காரணமாக தடையில் இருந்து கரிஞ்சா தப்பினார்.
பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 15-வது நிமிடத்திலேயே கோல் அடித்து செக்கோஸ்லோவேகியா முன்னிலை பெற்றது. ஆனால் 2-வது நிமிடத்திலேயே பிரேசில் கோல் கணக்கை சமன் செய்தது. இதன் பிறகு போட்டி கடுமையானது. இரு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக போராடின. 68-வது நிமிடத்தில் ஸிட்டோவும், 77-வது நிமிடத்தில் வாவாவும் கோல் அடிக்க பிரேசில் அணி 3-1 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. பீலே இல்லாமல் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல கரிஞ்சாவின் சிறப்பான ஆட்டம் முக்கியக் காரணமாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT