Published : 11 May 2018 05:40 PM
Last Updated : 11 May 2018 05:40 PM

கோலிக்குப் பிறகு சிறந்த பேட்ஸ்மென்.. டிவிலியர்ஸை நினைவூட்டுகிறார்..: ராகுல் மீது பயிற்சியாளர் புகழ்‘பாரம்’

 

ஐபிஎல் சீசனின் அதிகரன்களுக்கான ஆரஞ்சுத் தொப்பியை டெல்லி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பெற்றிருந்தாலும் முந்தைய ஆரஞ்சு தொப்பி வீர்ர் ராகுலுக்கும் புகழாரங்கள் கூடி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் 11 போட்டிகளில் 521 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், கேன் வில்லியம்சன் 11 போட்டிகளில் 493 ரன்களுடன் 2ம் இடத்திலும், லோகேஷ் ராகுல் 10 போட்டிகளில் 471 ரன்கள் எடுத்து 3ம் இடத்திலும் உள்ளனர். 4ம் இடத்தில் சூரியகுமார் யாதவ், 5ம் இடத்தில் அம்பாத்தி ராயுடு. கேப்டன் விராட் கோலி 6ம் இடத்தில் இருக்கிறார். தோனி 360 ரன்களுடன் 7ம் இடத்தில் உள்ளார். ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷேன் வாட்சன் ஆகியோர் அடுத்தடுத்து முதல் 10 இடங்களில் உள்ளனர்.

இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு யு-19 காலத்திலிருந்தே பயிற்சியளித்த கர்நாடக அணியின் ரஞ்சி பயிற்சியாளர் பி.வி.ஷஷிகாந்த் புகழ்பாரம் ஏற்றும்போது கூறியதாவது:

கோலிக்குப் பிறகு இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மென் ராகுல்தான் என்று நான் நம்புகிறேன். இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் இன்னும் கூட மெருகேறியிருக்கிறது, ஏற்கெனவே அவரிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

முதன் முதலாக அவரது ஆட்டத்தைப் பார்த்தவுடனேயே நான் ஈர்க்கப்பட்டேன். அவரது டைமிங், உத்தி என் கண்களை உடனடியாக கவர்ந்திழுத்தது.

இனி அவரை யாரும் டெஸ்ட் பேட்ஸ்மென் மட்டுமே என்று கூற முடியாது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் பிரமாதம். அவரது பேட்டிங் எனக்கு ஏ.பி.டிவில்லியர்ஸை நினைவூட்டுகிறது.

இவ்வாறு ஸ்போர்ட்ஸ்டார் இதழில் அவர் தெரிவித்தார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x