Published : 27 Jun 2024 12:19 PM
Last Updated : 27 Jun 2024 12:19 PM

“ஸ்மார்ட்டாக விளையாட விரும்புகிறோம்” - ரோகித் சொல்லும் சக்சஸ் மந்திரம் | T20 WC 2024

கேப்டன் ரோகித் மற்றும் பும்ரா

கயானா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி வரும் 29-ம் தேதி அன்று இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.

இந்தச் சூழலில் இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது. “வலுவான ஆஸ்திரேலிய அணியை நாங்கள் வீழ்த்தியது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாக்-அவுட் போட்டிகளில் எங்களது கடந்த கால செயல்பாடு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. எங்களுக்கு இது நாங்கள் ஆடும் மற்றும் ஒரு போட்டி என கருதுகிறோம். இது அரையிறுதி ஆட்டம் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அது குறித்து நாங்கள் பேசிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. அணியின் சிறந்த மைண்ட்செட்டை அப்படியே எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

நாங்கள் ஸ்மார்ட்டான கிரிக்கெட் அணியாக இருக்க விரும்புகிறோம். அனைத்தையும் எளிமையானதாக வைக்க விரும்புகிறோம். யாருக்கு என்ன ரோல் என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்” என தெரிவித்தார்.

இன்சமாம் குற்றச்சாட்டு குறித்து: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், இந்தியா பந்தை சேதப்படுத்தியது என குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு ரோகித் பதில் அளித்துள்ளார். “இங்குள்ள விக்கெட் வறண்ட நிலையில் உள்ளது. அனைத்து அணியினருக்கும் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. இதை புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x