Last Updated : 15 May, 2018 07:44 PM

 

Published : 15 May 2018 07:44 PM
Last Updated : 15 May 2018 07:44 PM

ஆஸி. அணித்தேர்வாளர் பொறுப்பிலிருந்து மார்க் வாஹ் திடீர் விலகல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் என்று கருதப்படும் மார்க் வாஹ் தேசிய அணித் தேர்வாளர் பொறுப்பை திடீரென உதறினார்.

தொலைக்காட்சி நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் அவர் தொலைக்காட்சி வர்ணனையாளராக இனி வலம் வருவார். ஆகஸ்ட் 31ம் தேதி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தம் முடிவடையும் போது அதை மீண்டும் புதுப்பிக்க மாட்டார்.

“சக தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள், வீரர்களுடன் சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாகப் பணியாற்றியது எனக்கு கிடைத்த கவுரவம், அனைத்து வடிவங்களிலும் ஆஸ்திரேலியா அணி செய்த சாதனைகள் பெருமையளிக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் திறமைக்குப் பஞ்சமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அணி மேன்மேலும் வலுவடைவதைப் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் மார்க் வாஹ்.

இதே ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு ஏற்கெனவே கில்கிறிஸ்ட், ஆலன் போர்டர், மைக் ஹஸ்ஸி, இங்கிலாந்தின் மைக்கேல் வான், ஷேன் வார்ன் ஆகியோர் கொண்ட பெரிய அணி உள்ளது, இதில் மார்க் வாவும் இணைகிறார்.

128 டெஸ்ட் போட்டிகளையும் 244 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ள மார்க் வாஹ் 2014 முதல் தேர்வுக்குழுவில் இருந்தார். இவர் தற்போது பே-டிவி நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸில் இணைகிறார். இவர் ஆடிய காலத்தில் இவரைப்போல் பேட் செய்வது கடினம். இது ஒரு தனிச்சிறப்பான பேட்டிங் ஆகும், ஆனால் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஸ்லிப் பீல்டிங். முன்னால் விழும் பந்துகளையும் டைவ் அடித்துப் பிடித்து விடுவார்.

ஸ்லிப் பீல்டிங்கில் இரண்டு கால்களையும் என்று விரித்து வைத்துக் கொண்டிருக்கும் இந்திய ஸ்லிப் பீல்டர்கள் இவரிடமிருந்து ஏதாவது டிப்ஸ் பெற்றால் பயனுள்ளதாக இருக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x