Published : 15 May 2018 07:32 AM
Last Updated : 15 May 2018 07:32 AM
4 நாடுகள் பங்கேற்ற யு 16 கால்பந்து தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
செர்பியாவில் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்தியா நேற்று தனது கடைசி ஆட்டத்தில் தஜிகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் கிப்சனும், 7-வது நிமிடத்தில் சைலோவும் தலா ஒரு கோல் அடிக்க இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 9-வது நிமிடத்தில் ஷபாஜ் கோல் அடிக்க இந்திய அணியின் முன்னிலையானது 3-0 என அதிகரித்தது. 10 நிமிடங்களுக்குள் 3 கோல்களை வாங்கிய தஜிகிஸ்தான் அணி அதிர்ச்சியில் உறைந்தது.
எனினும் அந்த அணி 12-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. பெனால்டி கிக் மூலம் அந்த அணி முதல் கோலை அடித்தது. அடுத்த 3-வது நிமிடத்தில் அந்த அணி மேலும் ஒரு கோலை அடிக்க பரபரப்பு ஏற்பட்டது. முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 3-2 என முன்னிலை வகித்தது. 66-வது நிமிடத்தில் இந்திய அனி தனது 4-வது கோலை அடித்தது. இந்த கோலை ரோஹித் தானு அடித்தார். இதன் பின்னர் கடைசி வரை போராடியும் தஜிகிஸ்தான் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.
இந்திய அணிக்கு இந்தத் தொடரில் இது 3-வது வெற்றியாக அமைந்தது. ம
முதல் ஆட்டத்தை செர்பியாவுக்கு எதிராக கோல்களின்றி டிரா செய்திருந்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டான் அணியை வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 7 புள்ளிகள் பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT