Published : 22 Apr 2018 08:29 AM
Last Updated : 22 Apr 2018 08:29 AM

கடந்த போட்டியில் நான் அடித்த 90 ரன்களை விட இந்த 30 ரன்கள் பெரியது: விராட் கோலி

ஏ.பி.டிவில்லியர்ஸ் எனும் ஜீனியஸ் பெற்றுத் தந்த வெற்றியை அடுத்து புன்னகை தவழும் முகத்துடன் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, டெல்லியை வீழ்த்தியது பற்றி பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசினார்.

டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் சேர்க்க, டிவில்லியர்ஸ் மிக முக்கியமான 30 ரன்கள் பங்களிப்பு செய்தார்.

தன்னுடைய இன்னிங்ஸ், டிவில்லியர்ஸ் பற்றி ஆர்சிபி கேப்டன் விராட் கூறியதாவது:

கடந்த போட்டியில் நான் அடித்த 90 சொச்ச ரன்களை விட இந்த 30 ரன்கள் பெரியது. ஏனெனில் நாங்கள் வெற்றி பெற்றோம். இன்னும் சில புலங்களில் சரி செய்ய வேண்டியுள்ளது. ஆனால் ஏ.பி. போல் ஒரு வீரர் அணியில் இருந்தால் அவர் எப்போதும் உங்களைப் புன்னகைக்கவே வைப்பார்.

எங்கள் ஆட்டம் பற்றி நாங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம். அதன் பிறகு ஏபி போய்க்கொண்டேயிருக்கிறார். 60-70 ரன்கள் கூட்டணி அமைத்தால் போதும் வெல்ல முடியும். கடைசி வரை என்னால் நிற்க முடியாமல் போனது வருத்தமே.

டிரெண்ட் போல்ட் எடுத்த கேட்ச் அசந்து போனேன். அதுவும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இது நடந்திருப்பது சிறப்பு வாய்ந்தது. அந்தக் கேட்சைத் திரும்பிப் பார்க்கும் போது நாம் அவுட் ஆனதற்காக வருத்தப்படத் தேவையில்லை என்று தோன்றுகிறது அப்படிப்பட்ட பிரமாதமான கேட்ச் அது.

பந்து வீச்சில் அருமையாகத் தொடங்கினோம். 15 ஓவர்கள் வரை தெளிவாக இருந்தோம். நிறைய பாசிட்டிவ்கள் கிடைத்துள்ளன, இன்னும் சில பகுதிகளைச் சரி செய்ய வேண்டும். அணி நம்பினால் ரசிகர்களும் நம்புவார்கள் அதைத்தான் இன்று பார்த்தோம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x