Published : 01 Jun 2024 09:45 PM
Last Updated : 01 Jun 2024 09:45 PM

T20 WC பயிற்சி ஆட்டம்: வங்க தேசத்துக்கு எதிராக இந்தியா 182 ரன்கள் சேர்ப்பு

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரிஷப் பந்த் அரைசதம் கடந்து அசத்தினார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (2-ம் தேதி) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஓப்பனராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன்னில் எல்பிடபள்யூ ஆனார். 7ஆவது ஓவரில் ரோகித் சர்மா 23 ரன்களில் வெளியேறினார். முதல் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 92 ரன்களைச் சேர்த்திருந்தது. அரைசதம் கடந்த ரிஷப் பந்த் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் - ஷிவம் துபே பொறுப்பாக விளையாடிக்கொண்டிருக்க, 15ஆவது ஓவரில் 14 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார் துபே. அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி மிரட்டினார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் விக்கெட்டானார். 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 165 ரன்களைச் சேர்த்த்திருந்தது.

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இணைந்து ரன்களை உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹதீஹசன், ஷரிஃபுல் இஸ்லாம், மஹ்முதுல்லா, தன்வீர் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x