Published : 21 May 2024 10:58 PM
Last Updated : 21 May 2024 10:58 PM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் குவாலிஃபையர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் குவாலிஃபையர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 2ஆவது பந்தில் போல்டாகி ரன் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
2ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 3 ரன்களில் அவுட். 5ஆவது ஓவரில் நிதிஷ் ரெட்டி 9 ரன்களிலும், ஷாபாஸ் அகமது டக்அவுட்டாக பவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது ஹைதராபாத். ராகுல் திரிபாதி - ஹென்ரிச் கிளாசென் சிறிது நேரம் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் திரிபாதி அரைசதம் கடக்க, கிளாசென் 32 ரன்களில் அவுட் ஆனார்.
14 ஓவரில் பொறுப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் திரிபாதி 55 ரன்களில் ரன்அவுட் ஆனார். அதே ஓவரில் சன்வீர் சிங் டக் அவுட்டாகி வெளியேற ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் காலியானது. 15ஆவது ஓவரில் அப்துல் சமத் 16 ரன்களுக்கு வெளியேறினார்.
16ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமார் டக் அவுட்டாக மோசமாக விளையாடிக்கொண்டிருந்தது ஹைதராபாத். 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் 159 ரன்களை சேர்த்தது.
160 ரன்கள் இலக்குடன் பேட்டிங் இறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஓப்பனர்களாக இறங்கிய ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், சுனில் நரேன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹ்மானுல்லாஹ் 14 பந்துகளில் 23 ரன்களும், சுனில் நரேன் 16 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து இறங்கிய வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஆளுக்கொரு அரை சதம் விளாசினர். வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 4 சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகள் என 51 ரன்கள் குவித்தார். அதே போல 24 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஐந்து பவுண்டரிகள் என 58 ரன்களை ஸ்ரேயஸ் ஐயர் எடுத்தார்.
இப்படியாக 13.4 ஓவர்களில் 164 ரன்கள் குவித்து ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா. இதன் மூலம் ஃபைனல்ஸில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நுழைந்துள்ளது. தோல்வியடைந்த ஹைதராபாத் அணி நாளை நடைபெறும் எலிமினேஷன் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் வெள்ளிக்கிழமை களம் காண்பார்கள். அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும்.
12 years apart - Same goal. Same dream. pic.twitter.com/I9oDVY3v2c
— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT