Published : 12 May 2024 12:39 AM
Last Updated : 12 May 2024 12:39 AM
கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
158 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் இஷான் கிஷன், திலக் வர்மா தவிர மற்றவர்கள் யாரும் நன்றாக விளையாடவில்லை. இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். அவரை தவிர, ரோஹித் சர்மா 19 ரன்கள், சூரியகுமார் யாதவ் 11 ரன்கள், ஹர்திக் பாண்டியா 2 ரன்கள் என சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த தவறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டையும் பறிகொடுத்தனர்
இறுதிக்கட்டத்தில் திலக் வர்மா போராடினார். கடைசி 10 பந்துகளில் 39 ரன்கள் வெற்றிக்கு என்ற நிலையில் களத்துக்குள் வந்த நமன் தீர் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி விளாசினார். கடைசி ஆறு பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார் நமன் தீர். சில நொடிகளிலேயே திலக் வர்மா 32 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால், 16 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ். 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
கொல்கத்தா இன்னிங்ஸ்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்ததால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை விட்டதை அடுத்து 16 ஓவர்களாக மேட்ச் குறைக்கப்பட்டு இரவு 9 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் 5 ஓவர்கள் மட்டும் பவர் பிளே, ஒரு பவுலர் அதிகபட்சம் 4 ஓவர்கள் பந்து வீசலாம், 3 பவுலர்கள் அதிகபட்சம் 3 ஓவர்கள் வீசலாம் என்ற விதிமுறைகளுடன் போட்டி தொடங்கியது.
பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சுனில் நரேனை தனது யார்க்கர் பந்துவீச்சில் போல்டக்கி பூஜ்ஜியத்தில் வெளியேற்றினார் பும்ரா. பிலிப் சால்ட் 6 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டானார். ஒன் டவுன் இறங்கிய வெங்கடேஷ் அய்யர் நம்பிக்கை அளித்தார். 42 ரன்கள் எடுத்து அவர் விக்கெட்டாக, நிதிஷ் ராணா 33 ரன்கள், ரஸல் 24 ரன்கள், ரிங்கு சிங் 20 ரன்கள் எடுத்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT