Published : 04 May 2024 01:01 AM
Last Updated : 04 May 2024 01:01 AM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் 8-வது தோல்வியை எதிர்கொண்டுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. வெள்ளிக்கிழமை அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது மும்பை.
இந்த சூழலில் தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தெரிவித்தது. “இந்தப் போட்டியில் எங்களது பேட்டிங் இன்னிங்ஸில் நாங்கள் முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறினோம். தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றால் அதற்கான பலனை பெற வேண்டி இருக்கும்.
நிறைய வினாக்களுக்கு விடை தேட வேண்டியுள்ளது. அதற்கு சிறிது நேரம் பிடிக்கும். இப்போதைக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை. எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருந்தது. முதல் இன்னிங்ஸை காட்டிலும் விக்கெட் சற்று சிறப்பானதாக இருந்தது.
களத்தை விட்டு வெளியேறாமல் எப்போதும் போராட வேண்டும். அதை எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். கடினமான நாட்கள் வரும். இது சவாலான காலம். ஆனால், அந்த சவால்கள்தான் உங்களை சிறந்ததாக்கும்” என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT