Published : 30 Apr 2024 01:40 AM
Last Updated : 30 Apr 2024 01:40 AM
கொல்கத்தா: ‘அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகன் நான்’ என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். அஸ்வின் உடனான யூடியூப் சேனல் கலந்துரையாடலில் அவர் இந்த ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்தது...
“ஐபிஎல் தொடங்கிய போது நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகனாக இருந்தேன். மேத்யூ ஹைடன், தோனி உட்பட சிஎஸ்கே அணி அபாரமாக இருந்தது. இப்போதும் சிஎஸ்கே மீது ஈர்ப்பு உள்ளது. ஆனால், என்னுடைய இளம் வயதில் எனது பேவரைட் ஐபிஎல் அணி என்றால் அது சிஎஸ்கே தான்.
நான் இளையோர் கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு 2012 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றேன். அதற்கு முன்பு வரை எனது பேவரைட் சிஎஸ்கே தான். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி பக்கம் எனது கவனம் திரும்பியது” என அவர் சொல்லியுள்ளார்.
29 வயதான குல்தீப் யாதவ், ஐபிஎல் கிரிக்கெட்டில் 2012 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றார். ஆனால், அவருக்கு ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2014 முதல் 2021 வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2022 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 81 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT