Published : 04 Apr 2018 08:25 AM
Last Updated : 04 Apr 2018 08:25 AM

ஐபிஎல் விளம்பர தூதராக ஜூனியர் என்டிஆர் நியமனம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தெலுங்கு மொழிக்கு விளம்பர தூதராக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு திரைப்பட இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர், அவ்வப்போது சின்ன திரையிலும் தனது சுவாரஸ்யமான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். பிக் பாஸ் தெலுங்கில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது, தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தெலுங்கு மொழியில் ஒளிப்பரப்பாகும் சானலில் இவர்தான் விளம்பர தூதர்.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இம்முறை தெலுங்கிலும் ஒளிபரப்பப்பட உள்ளது. ஸ்டார் நிறுவனம் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொண்டு உரையாட உள்ளார். தனக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் என்றால் விருப்பம் எனவும், சச்சின் தனது அபிமான விளையாட்டு வீரர் எனவும் ஜூனியர் என்.டி.ஆர் தெரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x