Published : 03 Apr 2024 03:06 PM
Last Updated : 03 Apr 2024 03:06 PM
மும்பை: டீம் மீட்டிங்குக்கு தாமதமாக வந்ததற்கான தண்டனையாக மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷன் உள்ளிட்டோர் சூப்பர்மேன் உடையுடன் விமானத்தில் பயணித்தனர்.
நேற்று முன்தினம் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன்மூலம் மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது மும்பை அணி. இந்த நிலையில், அடுத்த போட்டியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது மும்பை. வரும் ஞாயிறு டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், மும்பை அணி நிர்வாகம் தங்களது வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா ஆகியோர் சூப்பர் மேன் உடையில் ஹோட்டல் ரூமில் இருந்து விமான நிலையத்துக்கு பயணிக்கின்றனர்.
இதன் பின்னணி என்னெவென்றால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது டீம் மீட்டிகுக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு தண்டனையாக இந்த சூப்பர் மேன் உடையை அணிந்து வர வேண்டும் என்ற வேடிக்கையான விதியை கொண்டுவந்துள்ளது. அதன்படியே சமீபத்திய டீம் மீட்டிங்குக்கு தாமதமாக வந்த இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா உள்ளிட்ட வீரர்களை சூப்பர் மேன் உடையை அணிய வைத்துள்ளது.
அந்த உடையில் வீரர்கள் ஹோட்டல் அறையில் இருந்து விமான செல்லும் வழியில் நடந்த கலகலப்பான காட்சிகளை தங்களது வலைதளங்களில் பதிவிவேற்றியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT