Published : 01 Apr 2024 03:48 PM
Last Updated : 01 Apr 2024 03:48 PM
விசாகப்பட்டினம்: டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்துக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 191 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் 51 ரன்கள், வார்னர் 52 ரன்கள், பிரித்வி ஷா 43 ரன்கள் எடுத்தனர்.
இதன்பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 7 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து அந்த அணியால் 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் டெல்லி கேபிடல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே, இப்போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீசவில்லை எனக் கூறி அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்பதற்காக நேற்று கடைசி 2 ஓவரின்போது பவுண்டரி எல்லையில் நான்கு வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி நேற்று முதல் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT