Published : 22 Mar 2024 06:31 AM
Last Updated : 22 Mar 2024 06:31 AM
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்க உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் பாட் கம்மின்ஸ் டி20 வடிவில் முதன்முறையாக தொழில்முறை போட்டியில் கேப்டனாக களமிறங்க உள்ளார்.
அவரது தலைமையிலான ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (23-ம் தேதி) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “ஐபிஎல் தொடரின் இந்த சீசனுக்காக சில திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, தொடக்கம் அதிரடியாக இருக்க வேண்டும். வீரர்களுடன் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. வீரர்களைப் புரிந்துகொள்ள அவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். பயிற்சியாளர்களுடன் உரையாடி வருகிறேன்.
அணி வீரராக என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்டுள்ளேன். எங்கள் அணி இளம், அனுபவம் வாய்ந்த வீரர்கள் என சிறந்த கலவையாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த புவனேஷ் இருக்கிறார். கடைசி சீசனில் கேப்டனாக இருந்த மார்க்ரம் உள்ளார். அபிஷேக், உம்ரான் மாலிக் போன்ற வீரர்களை பார்க்கும்போது ஆர்வமாக இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT