Published : 18 Mar 2024 01:29 AM
Last Updated : 18 Mar 2024 01:29 AM
புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்நிலையில், வெற்றிக்கு பிறகு அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தது..
“இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். டெல்லியில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். அது சரியான நேரத்தில் நாங்கள் மீண்டு வர உதவியது. இது மாதிரியான தொடர்களில் அதுதான் மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு நாங்கள் நிறைய படிப்பினைகள் பெற்றோம். எது சரி? எது தவறு? என அதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
அணியை நாங்கள்தான் கட்டமைக்க வேண்டும் என எங்கள் அணி நிர்வாகம் சொன்னது. இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம். இந்த நேரத்தில் அணியின் அன்பான ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘ஈ சாலா கப் நம்தே’ என சொல்வது உண்டு. இப்போது ‘ஈ சாலா கப் நம்து’ (இப்போது கோப்பை நம் வசம்)” என அவர் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற ஆர்சிபி அணியினரை வீடியோ அழைப்பு மூலம் விராட் கோலி வாழ்த்தி இருந்தார். மகளிர் பிரீமியர் லீக் தொடரின் கோப்பையை வென்ற ஆர்சிபி வீராங்கனைகள் உற்சாகமாக போஸ் கொடுத்தனர். அந்த அணியின் ரசிகர்கள் வீதிகளில் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். சோஃபி மோலினக்ஸ், பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.
No we’re not crying, you are pic.twitter.com/Nb9TKf5NFw
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 17, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT