Published : 13 Mar 2024 07:58 AM
Last Updated : 13 Mar 2024 07:58 AM

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா

சென்னை: அஜர்பைஜான் நாட்டிலுள்ள பாகு நகரில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலக கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரானநார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 2-வது இடம் பிடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவை வெகுவாக பாராட்டியிருந்தார். மேலும் அப்போது அவர், தங்களது குழந்தைகளை செஸ் விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வரும் பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி - ரமேஷ்பாபுவிற்கு எக்ஸ்யுவி 400 என்றஎலக்ட்ரிக் காரை பரிசாக அளிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், எக்ஸ்யுவி 400 எலக்ட்ரிக் காரின் சாவியைபிரக்ஞானந்தாவின் பெற்றோரிடம் நேற்று மஹிந்திரா நிறுவனத்தினர் ஒப்படைத்தனர்.

அந்த புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, “காரை பெற்றுக்கொண்டோம். எனது பெற்றோர்மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x