Published : 13 Mar 2024 08:11 AM
Last Updated : 13 Mar 2024 08:11 AM
பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 26-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் இவோன் லியுடன் மோதினார். இதில் முதல் செட்டை சிந்து 21-10 என கைப்பற்றினார்.
2-வது செட் தொடங்க இருந்த நிலையில் காயம் காரணமாக இவோன் லி விலகினார். இதனால் சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் கொரியாவின் அன் சே யங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார் சிந்து. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 24-14, 13-21, 13-213 என்ற செட் கணக்கில் கொரியாவின் சு லி யங்கிடம் தோல்வி அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT