Published : 07 Feb 2018 05:24 PM
Last Updated : 07 Feb 2018 05:24 PM
இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் பொதுவாக தனக்கு எதிரான கருத்துகளை பொறுமையுடனும் விவேகத்துடனும் அணுகுபவர். ஆனால் அவர் தன் மீதான விமர்சனம் எந்த எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் மீதான கேலி, கிண்டல், விமர்சனங்கள் எல்லையைத் தாண்டும் விதமாக பலவேளைகளில் சென்று விடுகிறது, சமீப காலங்களில் இது ஒரு ஃபேஷனாகச் செயல்பட்டு வருகிறது. விசைப்பலகை முன் உட்காருபவர்களெல்லாம் எழுத்தாளர்கள், கருத்தாளர்கள் ஆகி வருவதும் இந்தப் போக்கிற்கு பெரும் காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அஸ்வின் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிரபலமானவர்கள் சமூக வலைத்தளங்களில் உலவும் துவேஷத்தை தாங்கிக் கொள்கின்றனர். என்னைப் பிடிக்காதவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள்.
ஆனால் இனியும் என்னால் ஒரு விஷயத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது, சாதி, மத அடிப்படையிலான வெறுப்புணர்வை பொறுத்துக் கொள்ள முடியாது. இதுவும் இனவெறி என்றுதான் கருதப்படுகிறது, எனவே இத்தகைய வெறுப்புணர்வை கொட்டும் நபர்களுக்கு எதிராக நானும் நிலைப்பாடு எடுத்து அவர்களை எதிர்கொள்வேன். நன்றி.
இவ்வாறு கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT