Published : 02 Feb 2024 07:21 AM
Last Updated : 02 Feb 2024 07:21 AM

தாய்லாந்து பாட்மிண்டன் தொடர்: கால் இறுதி சுற்றில் அஷ்மிதா சாலிஹா

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான கிடாம்பி காந்த் தோல்வி அடைந்தார்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முன்னாள் முதல் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், சகநாட்டைச் சேர்ந்த மிதுன் மஞ்சுநாத்துடன் மோதினார். இதில் 63-ம் நிலை வீரரான மிதுன் மஞ்சுநாத் 21-9, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிசுற்றுக்கு முன்னேறினார். இந்தஆட்டம் 54 நிமிடங்கள் நடைபெற்றது. கால் இறுதி சுற்றில் மஞ்சுநாத், நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவுடன் மோதுகிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீன தைபேவின் யு போ பையுடன் மோதினார். இதில்அஷ்மிதா சாலிஹா 21-12,15-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் நுழைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா,காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 24-22 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த தனிஷாகிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x