Published : 31 Jan 2024 07:08 AM
Last Updated : 31 Jan 2024 07:08 AM

மகளிருக்கான டி20 தரவரிசை: 2-வது இடம் பிடித்தார் தீப்தி சர்மா

துபாய்: மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பாகிஸ்தானின் சதியா இக்பாலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 718 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

மற்றொரு இந்திய வீராங்கனையான ரேணுகா சிங் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் நோன்குலு லேகோ லபா 3 இடங்கள் பின்தங்கி 5வது இடத்துக்கு இறங்கிஉள்ளார். முதல் இடத்தில் இங்கிலாந்தின் சோஃபி எக்கல்ஸ்டோன் 777 புள்ளிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறார்.

மற்றொரு இங்கிலாந்து வீராங்கனையான சாரா கிளென் 4-வதுஇடத்தில் தொடர்கிறார். பாகிஸ்தானின் நஷ்ரா சாந்து, இலங்கையின் இனோகா ரனவீரா, மேற்கு இந்தியத் தீவுகளின் ஹேலி மெத்தியூஸ், நியூஸிலாந்தின் ஃப்ரான் ஜோனாஸ் ஆகியோர் முறையே 6 முதல் 9-வது இடங்களில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்திசர்மா 4-வது இடத்தில் தொடர்கிறார். பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் முறையே 13, 16, 17-வது இடங்களில் தொடர்கின்றனர். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, தஹ்லியா மெக்ராத் ஆகியோர் முதல் இரு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x