Published : 31 Jan 2024 08:06 AM
Last Updated : 31 Jan 2024 08:06 AM
மஸ்கட்: 16 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐவர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் நேற்று இந்தியா, நெதர்லாந்துடன் மோதியது. இதில்இந்திய அணி 4-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தியஅணி சார்பில் முகமது ரஹீல் ஹாட்ரிக் கோல் (1, 7, 25-நிமிடங்கள்) அடித்தார். மன்தீப் 11-வதுநிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
நெதர்லாந்து அணி தரப்பில் சான்டர் டி விஜன் (4, 15-வது நிமிடங்கள்), அலெக்சான்டர் ஸ்கோப்(10, 26-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும் லூகாஸ்மிடென்டோர்ப் (12-வது நிமிடம்), ஜேமி வான் ஆர்ட் (13-வது நிமிடம்), பெபிஜின் ரெயெங்கா (20-வது நிமிடம்) ஆகியோர் தலாஒரு கோலும் அடித்தனர். அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி5-8வது இடத்துக்கான ஆட்டத்தில் கென்யாவுடன் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT