Published : 31 Jan 2024 08:16 AM
Last Updated : 31 Jan 2024 08:16 AM
ஹைதரபாத்: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணிக்கு இங்கிலாந்து எச்சரிக்கை கொடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த அணியின் வெற்றியில் ஆலி போப் விளாசிய சதமும், சுழற்பந்து வீச்சில் டாம் ஹார்ட்லி 2-வது இன்னிங்ஸில் வீழ்த்திய 7 விக்கெட்களும் முக்கிய பங்கு வகித்தன. இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்போது, “இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிக்காதது அவர்களுக்கு வருத்தத்தை அளித்திருக்கும். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்தது.
ஆனால், அவர்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடி இருந்தால் இன்னும் அதிக ரன்களை எடுத்திருக்கலாம். இந்திய அணி இதுபோன்ற தோல்விகளில் இருந்து மீண்டு வந்துள்ளது.
இதை கடந்த கால வரலாறுகளில் இருந்து காணலாம். அதனால் அடுத்தப் போட்டி இங்கிலாந்துக்கு சவாலானதாக இருக்கும். அதே சமயம் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களிலும் இங்கிலாந்தின் அதிரடி ஆட்ட அணுகுமுறை திறன்மிக்கதாக இருக்கும்என்ற எச்சரிக்கையை இந்திய அணிக்கு இங்கிலாந்து கொடுத்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT