Published : 27 Jan 2024 05:59 AM
Last Updated : 27 Jan 2024 05:59 AM
சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதலில் 55 கிலோ எடைப் பிரிவில் தமிழக வீரர் எல்.தனுஷ் 225 கிலோ(101 124) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிராவின் அகில் கோலி 212 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், அருணாச்சல பிரதேசத்தின் சோசர் தமா 209 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
துப்பாக்கி சுடுதலில் டிராப் கலப்பு அணிகள் பிரிவில் ராஜஸ்தானின் வியன் பிரதாப் சிங், ஐஸ்வரி பிரதாப் ஜோடி 127 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது.தமிழகத்தின் நிலா ராஜா பாலு, யுகன் ஜோடி 125 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப் கேசவ் சவுகான், கிரிஷிகா ஜோஷிஜோடி 121 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
வாலிபாலில் தமிழ்நாடு ஆடவர்அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 25-17,25-20, 25-18 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்று அரை இறுதிசுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில்ஹரியானா ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.‘ஏ’ பிரிவில் உத்தரபிரதேசம்அணி 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் நாக் அவுட்சுற்றில் நுழைந்தது. இதே பிரிவில்ஆந்திரபிரதேசம் 6 புள்ளிகளுடன் 2வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
மகளிருக்கான வாலிபாலில் தமிழ்நாடு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சத்தீஷ்கருடன் மோதியது. இதில் தமிழ்நாடு மகளிர் அணி 25-7, 25-6, 25-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு மகளிர் அணி தனது ‘பி’ பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் குஜராத் அணி 3 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
‘ஏ’ பிரிவில் மேற்கு வங்கம் அணி 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றில் கால்பதித்தது. இதே பிரிவில் ராஜஸ்தான் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 8-வது நாளில் மகாராஷ்டிரா 28 தங்கம், 24 வெள்ளி,31 வெண்கலம் என 83 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்தது. தமிழகம் 26 தங்கம், 13 வெள்ளி, 23 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்தது. ஹரியானா 21 தங்கம், 13 வெள்ளி, 30 வெண்கலம் என 64 பதக்கங்களுடன் பட்டியலில் 3-வது இடத்தில் நீடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT