Published : 20 Jan 2024 07:28 AM
Last Updated : 20 Jan 2024 07:28 AM

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்: நியூஸிலாந்து தொடர் வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில்விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 4-வது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

சயீம் அயூப் 1, ரிஸ்வான் 90, பாபர் அஸம் 19, பகர் ஸமான் 9, சாஹிப்சதா பர்ஹான் 1, இப்திகார் அகமது 10, முகமது நவாஸ் 21 ரன்கள் எடுத்தனர்.

மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், ஆடம் மில்ன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய நியூஸிலாந்து அணி பின் ஆலன், டிம் செய்பர்ட், வில் யங் ஆகியோரின் விக்கெட்களை வேகமாக இழந்தது. ஆனாலும் டேரில் மிட்செல் 72 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 70 ரன்களும் அதிரடியாகக் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர்ச்சியாக 4 டி20 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x