Published : 15 Jan 2024 07:14 AM
Last Updated : 15 Jan 2024 07:14 AM

அல்டிமேட் கோ கோ சீசன் 2: குஜராத் அணி சாம்பியன்

கட்டாக்: அல்டிமேட் கோ கோ சீசன் 2 இறுதிப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள நேருவிளையாட்டரங்கில் அல்டிமேட் கோ கோசீசன் 2 தொடர் நடைபெற்று வந்தது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று சென்னை குயிக் கன்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் 31-26 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது.

2-வது இடம் பெற்ற சென்னை குயிக் கன்ஸ் அணி ரூ.50 லட்சத்தையும், 3-வது இடம் பிடித்த ஒடிசா ஜாகர்நட்ஸ் ரூ.30 லட்சத்தையும் பரிசாக பெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x