Published : 03 Jan 2024 11:53 PM
Last Updated : 03 Jan 2024 11:53 PM

அழகர்கோவிலில் மாநில அளவிலான மகளிருக்கான வாலிபால் போட்டிகள் தொடக்கம்

மதுரை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநில அளவிலான மகளிர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான வாலிபால் போட்டி புதன்கிழமை அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டிகளை கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் த.வினோத், தலைமையாசிரியர் வ.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட கையுந்து பந்து கழகத்தலைவர் சந்திரசேகர், செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எஸ்பி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகள் இரவு, பகல் என தொடர்ந்து நடைபெறுவதால் இன்று இரவு மின்னொளியில் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50,001, 2-ம் பரிசு ரூ.40001, 3-ம் பரிசு 30,001, 4-ம் பரிசு ரூ.25001, 5-ம் பரிசு ரூ.15001, 6-ம் பரிசு ரூ.10001 வழங்கப்படுகிறது.

அதேபோல், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முறையே ரூ.10001, ரூ.8001, ரூ.7001, ரூ.500, ரூ.3001, ரூ.2001 வரை பரிசு வழங்கப்படுகிறது. இப்போட்டியில், காவல்துறை மகளிர் அணி, சென்னை எஸ்ஆர்எம் சென்னை மகளிர் அணி, ஈரோடு பிகேஆர் மகளிர் அணி, தபால்துறை மகளிர் அணி, அமெரிக்கன் கல்லூரி மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். இப்போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் மு.மச்சராஜா, முதன்மை பயிற்சியாளர் பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x