Published : 01 Jan 2024 06:08 AM
Last Updated : 01 Jan 2024 06:08 AM

இந்தியாவுடன் 2-வது டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடவுள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியகிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த மாதம்26-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் வரும் 3-ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்:டீன் எல்கர் (கேப்டன் ), டேவிட் பெடிங்காம், நந்த்ரே பர்கர், டோனி டி ஜோர்ஸி, ஜுபைர் ஹம்சா, மார்கோ யான்சன், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி நிகிடி, கீகன் பீட்டர்சன், காகிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , கைல் வெர்ரைன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x