Published : 24 Dec 2023 05:48 AM
Last Updated : 24 Dec 2023 05:48 AM
புவனேஷ்வர்: அல்டிமேட் கோ கோ சீசன் 2 ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று தொடங்குகிறது. வரும் ஜனவரி 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஒடிசா ஜாகர்நட்ஸ், தெலுங்கு யோதாஸ், சென்னை குயிக் கன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை கில்லாடிஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடக்க நாளான இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஒடிசா ஜாகர்நட்ஸ் - ராஜஸ்தான் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தெலுகு யோதாஸ் - மும்பை கில்லாடிஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை குயிக் கன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் நாளை (25-ம் தேதி) தெலுகு யோதாஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் 6 அணிகளும் லீக் சுற்றில் தலா இரு முறை நேருக்கு நேர் மோதும். இந்த வகையில் 18 நாட்கள் நடைபெறும் லீக் சுற்றில் 30 ஆட்டங்கள் இடம் பெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதி ஆட்டம் ஜனவரி 13-ம் தேதி நடைபெறுகிறது.
அல்டிமேட் கோ கோ சீசன் 2 போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் சானல் மற்றம் சோனி லைவ் செயலி நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
சென்னை குயிக் கன்ஸ் அணி விவரம்: அமித் பாட்டீல், மதன், ராம்ஜி காஷ்யப், லட்சுமண் கவாஸ்,ஆதர்ஷ் மோஹிதே, சச்சின் பார்கோ, ஜோரா சூரஜ்,சூரஜ் லாண்டே, ஆதித்ய கூடலே, துர்வேஷ் சாலுங்கே, சந்து சாவ்ரே, ஆகாஷ் கடம், நரேந்திர கட்கேட்,முஸ்தபா பகவான், அர்ஜுன் சிங், விஜய் சிங் , ஆஷிஷ் படேல், எம்.முகிலன், ஆகாஷ் பால்யன், சுமோன் பர்மன், பவன் குமார், கிரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT