Published : 21 Dec 2023 06:44 AM
Last Updated : 21 Dec 2023 06:44 AM

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

பார்ல்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு பார்ல் நகரில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ள கடைசிமற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட்போட்டியில் இரு அணிகளும் இன்று பார்ல் நகரில் மோதுகின்றன. இந்திய அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இரு ஆட்டங்்களிலும் முறையே 5 மற்றும் 4 ரன்களில் நடையை கட்டினார். 3-வது வீரராக களமிறங்கும் திலக் வர்மாவிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படவில்லை. அநேகமாக இன்றையஆட்டத்தில் அவரது இடம் பறிபோகக்கூடும். அவர், நீக்கப்படும் பட்சத்தில் ரஜத் பட்டிதார் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

சஞ்சுசாம்சன், ரிங்கு சிங் ஆகியோரும் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முதல் 2 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்த சாய் சுதர்சன், 2-வது ஆட்டத்தில் அரைசதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில்முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான் ஆகியோர் கெபர்ஹாவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதேவேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார், இரு ஆட்டங்களிலும் விக்கெட் ஏதும் கைப்பற்றாதது பந்துவீச்சு பலவீனத்தை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஜோடி 2-வது ஆட்டத்தில் கூட்டாக 14 ஓவர்களை வீசி 70 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

இவர்களது பந்து வீச்சு அழுத்தம் கொடுக்காததால் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்கள் 4 பேரை அந்த ஆட்டத்தில் இந்திய அணிபயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இவர்களில் ஒருவர் நீக்கப்பட்டு யுவேந்திர சாஹல் களமிறக்கப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டுமானால் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x