Published : 20 Dec 2023 06:50 PM
Last Updated : 20 Dec 2023 06:50 PM
புது டெல்லி: 2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலை தற்போது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ப்ளேயரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Hangzhou Asian Games: On the Indian Women's Kabaddi team winning the gold medal in the Asian Games and India's 100 medal mark, Coach of the Indian Women's Kabaddi Team Kavitha Selvaraj says, "..We are very happy... This was a very proud moment for India...Also, India's… pic.twitter.com/wZfsgITwzF
விருது வழங்கும் விழா ஜனவரி 9-ம் தேதி காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT