Last Updated : 08 Jan, 2018 05:00 PM

 

Published : 08 Jan 2018 05:00 PM
Last Updated : 08 Jan 2018 05:00 PM

தோனி விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடித்தார் சஹா!

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா 130 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் சுருட்டியதில் விக்கெட் கீப்பர் சஹாவின் பங்கு மிக முக்கியமாக அமைந்தது.

ஒரு டெஸ்ட் போட்டியில் 10 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வகையில் சஹா புதிய இந்திய சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக 9 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தோனி இந்த டெஸ்ட் சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.

2014 தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி 9 ஆஸ்திரேலிய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய த் துணைக் காரணமாக அமைந்தார். இதுதான் அதிகபட்ச டிஸ்மிசலுக்கு இந்திய சாதனையாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தது.

ஆனால் நடந்து கொண்டிருக்கும் கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் 10 கேட்ச்களை எடுத்து சஹா, தோனியின் சாதனையை கடந்துள்ளார்.

உலக அளவில் இங்கிலாந்தின் ரஸல் 11, ஏ.பி.டிவில்லியர்ஸ் 11, டெய்லர் 10, ஆடம் கில்கிறிஸ்ட் 10, சஹா 10 என சஹா இந்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் 5-ம் இடம் பிடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x