Published : 13 Dec 2023 06:59 AM
Last Updated : 13 Dec 2023 06:59 AM

உலக பாட்மிண்டன் தரவரிசை: அஸ்வினி - தனிஷா ஜோடி முன்னேற்றம்

புதுடெல்லி: உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி 4 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குவாஹாட்டி மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. முன்னதாக கடந்த 3-ம் தேதி முடிவடைந்த சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தது.

அடுத்தடுத்து இரு தொடர்களில் சிறந்த செயல் திறனைவெளிப்படுத்தியதன் மூலம்அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஜோடி 16 தொடர்களின் வாயிலாக 44,590 புள்ளிகளைபெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x