Published : 13 Dec 2023 07:26 AM
Last Updated : 13 Dec 2023 07:26 AM

இங்கிலாந்தின் ஆக்ரோஷ அணுகுமுறை இந்திய சுழற்பந்து வீச்சாளர்களிடம் எடுபடாது: மைக்கேல் வாகன் எச்சரிக்கை

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிவரும் ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கிடையே இந்திய மண்ணில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரிலும் பேட்டிங்கில் தங்களது பாஸ்பால் அணுகுமுறையே தொடரும் என சிலதினங்களுக்கு முன்னர் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்திருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் ஆக்ரோஷ அணுகுமுறையை இங்கிலாந்து அணி கடந்த ஒன்றரை வருடங்களாக பின்பற்றி வருகிறது. இந்த அணுகுமுறையை 18 டெஸ்ட் போட்டிகளில் கையாண்டு 13 ஆட்டங்களில் அந்தஅணி வெற்றியும் கண்டது. இந்நிலையில் இந்திய ஆடுகளங்களில் தரமான சுழற்பந்து வீச்சுக்குஎதிராக இங்கிலாந்து அணியின்பாஸ்பால் பேட்டிங் அணுகுமுறைஊதித் தள்ளப்படும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலகில் விளையாடுவதற்கு மிகவும் கடுமையான இடம் இந்தியா.

ஆஷஸ் தொடரில் நேதன்லயன் அணியில் முழு உடல்தகுதியுடன் இருந்தவரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அவர், சில ஓவர்களியே ஆட்டத்தின் போக்கை மாற்றினார். எட்ஜ்பஸ்டனில் நேதன் லயன் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பீல்டிங்கை விரித்து அவர், பந்து வீச சில நேரங்களில் அபத்தமான ஷாட்களை விளையாடி இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. இந்தியாவில் பந்துகள் நன்கு சுழலும் ஆடுகளங்களில் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரைச் சேர்த்தால், பாஸ்பால் அணுகு முறையை ஊதி விடுவார்கள். அவர்கள் முற்றிலுமாக அழித்துவிடக்கூடும். இந்த தொடர் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்தியாவில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x