Published : 05 Dec 2023 08:06 AM
Last Updated : 05 Dec 2023 08:06 AM
பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரை வீசும்போது கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்குதைரியம் அளித்தார் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ் தீப் சிங் தெரிவித்தார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி 20 ஆட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது.
இந்தப் போட்டியின் கடைசி ஓவரை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்வீசினார். கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 10 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இதுகுறித்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:நான் இந்த போட்டியில் முதல் 3 ஓவர்களில் நிறையரன்களை விட்டுக் கொடுத்ததாக நினைக்கிறேன். ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் அதற்கு நான் செய்த தவறுதான் காரணமாக இருக்கும் என்றும் நினைத்தேன்.
வேண்டுதல்: மேலும் கடைசிஓவரை வீச எனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அந்த வகையில் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. முக்கியமான 20-வது ஓவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்னிடம் வழங்கியபோது, “பழைய போட்டிகளில் நடந்ததை நினைக்க வேண்டாம். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.
நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நம்பிக்கையுடன் பந்து வீசுங்கள்'’ என்று தைரியம் அளித்து என் கையில்பந்தை கொடுத்தார்.
அவர் அளித்த தைரியத்திலும், உற்சாகத்திலும் சிறப்பாக பந்துவீசினேன். கடைசி ஓவரில் 3 ரன்கள்மட்டுமே விட்டுக்கொடுத்து அணிக்கு வெற்றித் தேடித்தந்ததில் மகிழ்ச்சி.
இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக எடுத்ததாகவே கருதுகிறேன். இந்த மைதானத்தில் இந்த ரன்களை வைத்து நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது.
இவ்வாறு அர்ஷ்தீப் சிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT