Published : 30 Nov 2023 11:44 PM
Last Updated : 30 Nov 2023 11:44 PM

IND vs SA | தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 3 ஃபார்மெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள்

இந்திய அணி வீரர்கள்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மாறும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இந்திய அணியை மூன்று ஃபார்மெட்டுகளிலும் வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்த உள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பிரேக் எடுத்துக் கொண்டுள்ளனர். பந்து வீச்சாளர் ஷமி, மறுத்து சிகிச்சையில் இருப்பதாகவும், அவரது ஃபிட்னஸ் உறுதி செய்யப்பட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரனும் உடற்திறனை நிரூபிக்க வேண்டி உள்ளது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இடம் பெறவில்லை. இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு வியாழக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்றது.

டி20 அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் , அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

ஒருநாள் அணி: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் பட்டிதார், ரிங்கு சிங், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், முகேஷ் குமார், அவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

இந்த தொடர் டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி நிறைவடைகிறது. இந்திய-ஏ அணி பயிற்சி போட்டியிலும் ஆட உள்ளது.

— BCCI (@BCCI) November 30, 2023

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x