Published : 28 Nov 2023 11:16 AM
Last Updated : 28 Nov 2023 11:16 AM

“நான் திரும்பி வந்துட்டேன் ரோகித்” - ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

தன் கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பித்த தன் குடும்பமான மும்பை இந்தியன்ஸுக்கே மீண்டும் திரும்பியது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்த வீடியோ ஒன்றில் ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: “நான் வந்து விட்டேன்! ரோகித் (சர்மா), (ஜஸ்பிரித்) பும்ரா, சூர்யா (சூர்யகுமார் யாதவ்), இஷான் (கிஷான்), பாலி (பொலார்ட்), மலிங்கா, வாருங்கள், தொடங்குவோம். மும்பைக்கு திரும்பி வந்ததன் உணர்வு பல காரணங்களுக்காக மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே கருதுகிறேன். 2015-ல் மும்பை இந்தியன்ஸ் உடன் எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியது. 2013-ல் அவர்கள் என் கிரிக்கெட் ஆட்டத்திறனை கவனித்தார்கள். இப்போது நான் அந்தப் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, ​​முழு பத்தாண்டு காலம் என்னமாதிரி இருந்தது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

மீண்டும் தாய்வீடு திரும்பிய உணர்வு என்னை முழுதும் ஆக்கிரமிக்கவில்லை. இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்திற்கு நான் திரும்பிவிட்டேன். கிரிக்கெட்டின் மூலம் சாத்தியமான அனைத்து விஷயங்களையும் நான் அடைந்துவிட்டேன். ஆகாஷும் முழு குடும்பமும் என் வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதியாக இருந்தனர். அவர்கள் என் ஏற்றத்திலும் தாழ்விலும் உடன் இருந்திருக்கிறார்கள், இந்தத் தருணம் உணர்ச்சிவசமானது. ஏனென்றால் நான் மீண்டும் என் வீட்டுக்கு வருவதைப் போல உணர்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி வைத்த மும்பை இந்தியன்ஸ் என்னும் எனது குடும்பத்திற்கு நான் திரும்பி வந்திருக்கிறேன்.

மும்பை இந்தியன்ஸ் நீங்கள் முதல் முறையாக என்னை ஆதரித்தீர்கள். அந்த எல்லா நினைவுகளுக்கும் என் இதயத்தில் ஒரு சிறப்பிடம் உண்டு. நீங்கள் மீண்டும் ஒருமுறை என்னை ஆதரிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நாங்கள் ஒரு குழுவாக வரலாற்றை உருவாக்கினோம். இப்போது மீண்டும் ஒருமுறை சக வீரர்களுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். என் அன்பான வரவேற்புக்கு நன்றி.”

அதாவது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஒரு சாம்பியன் பட்டமும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற வைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதன் மூலம் எங்களுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். இன்று அவர் மாற விரும்பினார் அவரது முடிவை ஆதரிக்கிறோம். அவரது முடிவுக்கு எங்களது ஆசிகள் எப்போதும் உண்டு என்று குஜராத் டைட்டன்ஸ் இயக்குநர் விக்ரம் சோலங்கி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x