Published : 25 Nov 2023 03:32 PM
Last Updated : 25 Nov 2023 03:32 PM

“என்னை அதிர்ஷ்டமில்லா கிரிக்கெட்டர் என்கின்றனர். ஆனால்...” - சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

திருவனந்தபுரம்: “நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது" என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு, கடந்த சில காலங்களாகவே இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முயன்றுவருகிறார். ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். சமீப ஆண்டுகளாகவே சிறந்த பார்மிலும் உள்ளார். எனினும், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

உலகக் கோப்பைக்கு முன்னதாக அவ்வப்போது ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணிகளில் இடம்பெற்றிருந்தாலும், ரிசர்வ் பிளேயராகவே இடம்பெற்றிருந்தார். உலகக் கோப்பையில் நான்காமிடத்தில் சஞ்சு இடம்பெறலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு வந்ததால் அவருக்கு இடம்கிடைக்கவில்லை.

தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், இளம் வீரர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட அணியே விளையாடி வருகிறது. இதிலும் சஞ்சுவுக்கு இடமில்லை. 2015 முதல் இப்போது வரை நிலையான இடம்பெற முடியாமல் இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் அவரை அதிர்ஷடமில்லாத வீரர் என்று அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் அளித்த நேர்காணலில் மக்கள் இப்படி அழைப்பது குறித்து பேசியுள்ளார் சஞ்சு. அதில், "மக்கள் அனைவரும் என்னை அதிர்ஷ்டமில்லாத கிரிக்கெட்டர் என்கின்றனர். அப்படியல்ல. நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரோகித் குறித்து பேசிய சஞ்சு, "என்னிடம் வந்து பேசிய முதல் அல்லது இரண்டாவது நபர் ரோகித் சர்மாதன் என நினைக்கிறன். 'ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுகிறீர்கள். ஆனால், மும்பைக்கு எதிராக அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ளீர்கள். நான் சிறப்பாக விளையாடுவதாக அடிக்கடி என்னிடம் கூறும் ஒரே நபர் அவர் மட்டுமே" என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x