Published : 25 Nov 2023 06:46 AM
Last Updated : 25 Nov 2023 06:46 AM

ஐஎஸ்எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலுடன் சென்னை இன்று மோதல்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி இந்த சீசனில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த நிலையில் அதன் பின்னர் ஹைதராபாத், பஞ்சாப் அணிகளை வீழ்த்தியது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வி அடைந்தது.

6 ஆட்டங்களில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள சென்னையின் எப்சி இன்று சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும். ஈஸ்ட் பெங்கால் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x