Published : 24 Nov 2023 06:51 AM
Last Updated : 24 Nov 2023 06:51 AM
மலாகா: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் கால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் செக்குடியரசை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் நடைபெற்ற இந்த மோதலில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செக்குடியரசின் தாமஸ் மச்சாக், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை எதிர்கொண்டார். இதில் தாமஸ் மச்சாக் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதனால் செக்குடியரசு 1-0 என முன்னிலை பெற்றது. 2-வது நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது.
அந்த அணியின் வீரர் அலெக்ஸ் டி மினார் 4-6, 7-6 (7-2), 7-5 என்ற செட் கணக்கில் போராடி செக்குடியரசின் ஜிரி லெஹெக்காவை தோற்கடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. கடைசியாக நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன், மேக்ஸ் புர்செல் ஜோடியானது செக்குடியரசின் ஜாகுப் மென்சிக், ஆடம் பாவ்லாசெக் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் மேத்யூ எப்டன், மேக்ஸ் புர்செல் ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பின்லாந்தை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT