Published : 19 Nov 2023 03:58 PM
Last Updated : 19 Nov 2023 03:58 PM
அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட் செய்து வரும் நிலையில் களத்துக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்தார்.
அந்த நபர் அணிந்திருந்த மேலாடையில் ‘Free Palestine’ மற்றும் ‘Stop - Bombing Palestine’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு தனது பாலஸ்தீன கொடியை தனது முகக் கவசமாகவும் அவர் அணிந்திருந்தார். ஸாம்பா வீசிய 14-வது ஓவரின் போது அந்த நபர் களத்துக்குள் நுழைந்தார். அப்போது கோலி மற்றும் ராகுல் பேட் செய்தனர். அவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கைது செய்து வெளியேற்றினர்.
கடந்த 40+ நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி வருகிறது. பல்வேறு உலக நாடுகள் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் உலகக் கோப்பை அரங்கில் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த வேண்டும் என்ற முழக்கம் ஒலித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் அடைக்கலம் தேடி பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேட்ச் அப்டேட்: இந்தியா 3 விக்கெட்களை இழந்த சூழலில் கோலி மற்றும் கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக அமையும். 27 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 142 ரன்கள் எடுத்துள்ளது.
Free Palestine
World Cup Final
World’s largest stadium
Most popular player of the match pic.twitter.com/7uduaL4wam— Siddharth (@DearthOfSid) November 19, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT